செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (00:15 IST)

டீன் ஏஜ் நபரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச புகைப்படம் வாங்கிய பிபிசி ஊழியர்.. அதிர்ச்சி தகவல்..!

பிபிசி நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர் ஒருவர் டீம் ஏஜ் நபரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச புகைப்படங்கள் வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இங்கிலாந்து நாட்டில் பிபிசி செய்தி சேனல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இளைஞர் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச புகைப்படங்களை வாங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. 
 
17 வயதில் இருந்தே அந்த நபர் பிபிசி ஊழியருக்கு ஆபாச புகைப்படங்களை கொடுத்துள்ளார் என்றும் அவர் இதுவரை 37.19 லட்சம் வரை பணம் பெற்றுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
இந்த விவகாரம் இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அமைச்சர் லூசி பிரேசர் கூறியபோது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த நிகழ்ச்சி குறித்து பிபிசி இயக்குனர் இடம் பேசி உள்ளேன் என்றும் இது குறித்து விரைவாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran