புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 5 அக்டோபர் 2019 (08:46 IST)

வெங்காய இறக்குமதியில் சிக்கல் – சமையல்காரரை எச்சரித்த வங்கதேச பிரதமர் !

இந்தியாவில் வங்கதேசத்துக்கு வெங்காய இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டுப் பிரதமர் தனது சமையல்காரருக்குப் புதிய கட்டளையைப் பிறப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வு ஏற்பட்டதை சரிசெய்யும் வகையில் வெங்காய ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த அண்டை நாடுகளாக பங்களாதேஷ், நேபாள் ஆகியவைப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்கு நட்புமுறைப் பயணமாக வந்துள்ள பங்க்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா பங்களாதேஷில் நிலவும் வெங்காய தட்டுபாடு  குறித்து பேசியுள்ளார். அப்போது ‘இந்தியா ஏன் வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியது எனத் தெரியவில்லை. இந்த அறிவிப்பு வந்த உடனேயே நான் எனது சமையல்காரரை அழைத்து என் அனுமதி இல்லாமல் உணவில் வெங்காயம் சேர்க்கக் கூடாது என சொல்லிவிட்டேன். திடீரென இந்த முடிவை இந்தியா எடுத்ததால் எங்களுக்கு பிரச்சனைகள் எழுந்துள்ளன. எதிர்காலத்தில் இது போல இல்லாமல் முன் கூட்டியே அறிவித்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.