1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (13:23 IST)

பாகிஸ்தான் அணியில் மற்றொரு முக்கிய வீரர் விலகல்…. கடைசி நேர சறுக்கல்!

இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டிடுல் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகியுள்ளார்.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. இன்றைய போட்டியில் பலம் மிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

முன்னர் லீக் சுற்றில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இன்றைய போட்டிக்கு இந்திய அணி தயாராக இருப்பதாகவும் எனவே வெற்றி தொடரும் என்றும் இந்திய அணியின் கேப்டன் கூறியுள்ளார்.

ஆனால் அதேநேரத்தில் லீக் போட்டி எங்களுக்கு ஒரு பயிற்சியாக இருந்தது என்றும் இன்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் என பாகிஸ்தான் அணியினர் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தானி காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.