வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (17:40 IST)

வெளியே ஆட்டோ.. உள்ளே ஸ்கூட்டி! பேட்மேன் வாகனம் மாதிரி செம மாஸ் – Hero Surge S32 EV!

Hero Surge S32 EV
இந்தியாவில் வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஆட்டோ மற்றும் ஸ்கூட்டராக இயங்க கூடிய புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் ”பேட்மேன்: டார்க் நைட்”. இந்த படத்தில் பேட்மேன் ஓட்டும் வாகனம் ரொம்பவே பிரபலமானது. கார் போல இருக்கும் அந்த வாகனத்தில் இருந்து ஒரு பகுதி பிரிந்து பைக்காகவும் செல்லும். அப்படியான ஒரு வாகனத்தை உண்மையாகவே உருவாக்கியுள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

மின்சார வாகன தயாரிப்புக்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடங்கியுள்ள கிளை நிறுவனமான Surge நிறுவனம் தனது புதிய வாகனமான S32 EV ஐ தயாரித்துள்ளது.

இந்த வாகனம் பார்க்க சாதாரண ஆட்டோ போல இருக்கும். தேவைப்பட்டால் இதிலிருந்து ஸ்கூட்டரை தனியாக பிரித்து எடுத்து இயக்க முடியும். ஆட்டோவிலிரிந்து ஸ்கூட்டரை பிரிக்க 3 நிமிடங்களே ஆகும். ஆட்டோ ரிக்‌ஷாவாக 500 கிலோ எடை வரை சுமக்கும் திறன் கொண்டது இந்த வாகனம். ஆட்டோவாக 50 கி.மீ வேகத்திலும், ஸ்கூட்டராக 60 கி.மீ வேகத்திலும் செல்லக் கூடியது.

இந்த புதிய Hero Surge S32 EV வாகனத்தின் விலை மற்றும் கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பயன்பாடுகளை கொண்ட ஒற்றை வாகனமான இதன் மீது பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Edit by Prasanth.K