அமெரிக்க பல்கலைக்கழக மேம்பாலம் இடிந்து 6 பேர் பலி!
அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தின் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைப்பாதை மேம்பாலம் இடிந்து விழுந்து 6-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடா பல்கலைக்கழகத்தின் அருகில் ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அந்த நெடுஞ்சாலையை பொது மக்கள், மாணவர்கள் கடக்க மிகவும் சிரமபடுகின்றனர். இதனால் அரசு சாலையின் குறுக்கே ஒரு மேம்பாலம் கட்ட முடிவு செய்தது. அதன்படி, கடந்த மாதம் முதல் மேம்பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று திடிரென அந்த 950 டன் எடையுள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது.
இதனால் அந்த மேம்பாலத்தை பயன்படுத்தியவர்கள் விபத்தில் சிக்கினர். அவர்களை மீட்க தீயணைப்புத்துறையினர், போலீசார் போராடி வருகின்றனர். அதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த விபத்தினால் 6-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கி ஆபத்தான நிலைமையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.