வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (18:50 IST)

ஒலிம்பிக் போட்டிக்கு வந்த வீராங்கனை கர்ப்பம்: காரணம் என்ன தெரியுமா?

பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவில் நாளை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை உலகமே எதிர்பார்த்தவாறு உள்ளன. இந்நிலையில் இந்த போட்டிக்கு ஒலிம்பிக் கிராமத்துக்கு வந்துள்ள வீரர்கள் பல்வேறு புகார்கள் கூறி வருகின்றனர்.


 
 
அடைப்பு ஏற்பட்ட கழிவறைகள், கசியும் குழாய்கள், வெளியே தெரியும் ஒயர்கள் என பல புகார்களை வீரர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் புதிய புகார் ஒன்றை கூறியுள்ளார் டேனிஷ் நீச்சல் வீராங்கணை அல்வில்டா ஜென்சன்.
 
ஜூலை 12-ஆம் தேதி ரியோ டி ஜெனிரோ வந்தார் அல்வில்டா. கடந்த திங்கள் கிழமை நடந்த லேசர் ரேடியல் மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருக்க செய்தியை கேட்டு அதிர்ந்து போயுள்ளார்.
 
அல்வில்டா ஜென்சன் கடந்த 3 மாதமாக உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை எனவும், மாசுபட்ட நீரில் கலந்துள்ள உயிரணு மூலம் தான் கர்ப்பமானதாக அவர் கூறுகிறார்.
 
இது குறித்து கூறிய அவர், நான் முதல் நாள் கடலில் பயணம் செய்த போது அதில் ஆயிரகணக்கான ஆணூறைகள் மற்றும் ஊசிகள் நீரில் மிதந்து வந்தன.
 
பார்ப்பதற்கு அசிங்கமாகவும், கேவலமாகவும் இருந்த அதனால் எனக்கு ஏதாவது நோய் வரும் என நினைத்தேன் ஆனால் இப்படி கர்ப்பமாவேன் என நான் நினைக்கவில்லை என கூறி உள்ளார்.