1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (20:52 IST)

ஆப்கானிஸ்தான் அதிபர் தஞ்சம் அடைந்தது இந்த நாட்டிலா?

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான் படைகள் புகுந்து அந்நாட்டின் தலைநகரை பிடித்து விட்டது என்பதும் தற்போது ஆப்கானிஸ்தான் நாடு முழுவதுமே தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தாலிபான்களின் ஆட்சிக்கு பயந்து உள்ளூரில் உள்ள பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக ஆப்கானில் இருந்து கிளம்பும் விமானங்களில் பெரும் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் அதிபர் பணத்துடன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது வந்துள்ள தகவலின்படி ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் ஐக்கிய அரபு எமிரேட் அமீரகம் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
 
இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது