1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மே 2023 (20:56 IST)

மனிதர்களில் 80 சதவீத பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் -பிரபல ஆராய்ச்சியாளர்

AI technology
இன்றைய நவீன இணையதள உலகில் முன்னணியில் உள்ள ஏஐ (AI)தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவின் மூலம், இன்று தனி நபர்களுக்குத் தேவையான விவரங்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

அறிவியல், கணிதம், கிரியேட்டிவ், பாடல், தொழில் நுட்பம் என்று அனைத்து வகையான செய்திகளையும், தகவல்களையும் நொடியில்  பெறும் வசதி கொண்டுள்ள நிலையில், மனிதர்களுக்குப் பதில், இனிமேல் ஏஐ தொழில் நுட்பம் பணியில் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  மனிதர்களில் 80  சதவீத பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் என்று அமெரிக்க- பிரேசிலிய நாட்டைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  இனிவரும் காலங்களில், மனிதர்கள் செய்கின்ற 80 சதவீத பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும். மருத்துவத்துறையில், செவிலியர் மற்றும் உதவியாளார் பணிகளுக்கு உலகளவில் போதுமான நபர்கள் இல்லாதபோது, செயற்கை நுண்ணறியவுடன் கூடிய ரோபோக்கள் அவ்விடங்களுக்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.