திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (13:40 IST)

இம்ரான்கானை கைது செய்ய களமிறங்கிய ராணுவம்.. பாகிஸ்தானில் பதட்டம்..!

இம்ரான்கானை கைது செய்ய காவல்துறையால் முடியாத நிலையில் இராணுவம் களம் இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான்கானை ஜாமினில் வெளிவர முடியாத வகையில் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்ரான் கானை கைது செய்ய காவல்துறையினர் முயன்ற போது அவரது கட்சியினர் போராட்டம் நடத்தியதை எடுத்து காவல்துறை அவரை கைது செய்ய முடியவில்லை
 
சுமார் 20 மணி நேரமாக காவல்துறையினருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இம்ரான்கானை காவல் துறையால் நெருங்க முடியாத நிலையில் இராணுவம் களமிறங்கும் என்றும், ராணுவ வீரர்கள் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. 
 
ராணுவம் களமிறங்கினால் தொண்டர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran