வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (09:17 IST)

பீரங்கி குண்டு வீசவில்லை! பொதுமக்கள் உயிரிழந்த விவகாரத்தில் ராணுவம் விளக்கம்!

Tank
பீகாரில் ராணுவ பயிற்சி மையம் அருகே மர்ம பொருள் வெடித்து 3 பெண்கள் பலியான விவகாரத்தில் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்திற்கு உட்பட்ட தெய்ரி தம்ரியில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தின் அருகே நேற்று முன் தினம் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்ததில் அந்த வழியாக சென்ற 3 பெண்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணுவ பயிற்சி மையத்தில் பீரங்கி பயிற்சியின்போது வீசப்பட்ட குண்டுதான் இதற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் இது மேலும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் இந்த வெடிகுண்டு விபத்து குறித்து ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தனாபூர் கண்டோன்மெண்ட் கர்னல் துஷ்யந்த் சிங் சவுகான் வெளியிட்ட அறிக்கையில் “தெய்ரி தம்ரி ராணுவ பயிற்சி மையத்தில் பீரங்கி சோதனைக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெறப்படுகிறது. ஆனால் சம்பவம் நடந்த மார்ச் 8ம் தேதி பயிற்சிக்காக அனுமதி பெறவில்லை. அன்று அங்கு பீரங்கி குண்டு எதுவும் வீசப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ஏற்கனவே வீசப்பட்ட பீரங்கி குண்டு வெடிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் அல்லது உலோக கழிவுகளை அகற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தாக இருக்கலாம் என்றும் கூறப்படும் நிலையில் இதுகுறித்த விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K