1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (19:46 IST)

பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் பறந்து வந்த ட்ரோன்... சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படை

பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் பறந்து வந்த ட்ரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.

 பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் ஒரு ட்ரோன் பறந்து வந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கவனித்தனர். மேலும் அந்த ட்ரோனில் துப்பாக்கி இருந்ததை அடுத்து உடனடியாக சுதாரித்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினார் 
 
ஆனால் அதற்குள் அந்த ட்ரோன் திரும்பி சென்றதை எடுத்து விவசாய நிலத்தில் விழுந்துவிட்டது. ஆறு இறக்கைகள் இருந்த அந்த ட்ரோனில் ஒரு ஏகே ரக துப்பாக்கி மற்றும் புல்லட்டுகள் இருந்ததாக ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva