வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:32 IST)

தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த அனிருத்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அனிருத் ரசிகர்களுடன் அமர்ந்து இப்படத்தைப் பார்த்து ரசித்தார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் காமெடித் திரைப்படமான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.  இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத், இப்படத்திற்கு இசையமைத்துள்ள  நிலையில், இன்று முதல் நாள் ரிலீஸையொட்டி, திரையரங்கில் அதிகாலையில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. எனவே அனிருத் திடீரென அதிகாலையில் தியேட்டருக்கு வந்து இப்படத்தைப் பார்த்து ரசித்தார். இதுகுறித்த புகைப்படடம் வைரலாகி வைரலாகி வருகிறது.