1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:26 IST)

இந்தி சர்ச்சை .....இரண்டு முன்னணி நடிகர்கள் மோதல்....

ajay dev khan
இந்தி மொழி தொடர்பான சர்ச்சையில் இரண்டு முன்னணி நடிகர்கள் சமூக  வலைதளங்களில் விவாதித்திக் கொண்டனர்.

 நான் ஈ, புலி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கிச்சா சுதீப் விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம்  கே.ஜி.எஃப் -2 பான் இந்தியா படமாக உருவாகிவிட்டது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் கூறிய சுதீப், கன்னடா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாகிவிட்டன. இனி மேல் இந்தி தேசிய மொழியாக இருக்கமுடியாது எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாய் இந்தி  நடிகர்  அஜய் தேவ்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தி மொழியில் ஒரு பதிவிட்டார். அதில்,  இந்தி ஒரு தேசிய மொழி இல்லை என்றால்   உங்கள் தாய்மொழி படங்களை இந்திமொழியில் ஏன் டப் செய்ய வேண்டும். இந்தி தான் தேசியமொழி எனப் பதிவிட்டிருந்தார்.  

இதற்கு கன்னட நடிகர் சுதீப், நான் இந்தி மொழியை நேசித்துக் கற்றுக்கொண்டதால்  நீங்கள் இந்தியில் எழுதியது புரிந்தது.  ஒருவேளை நான் கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் எப்படி உங்களுக்குப் புரியும் எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அஜவ் தேவ்கான், நான் தவறாகப் புரிந்துகொண்டதை தெளிவு படுத்தியதற்கு நன்றி…திரையுலகத்தை ஒன்றாகவே நினைக்கிறேன்..எல்லா மொழிகளையும் மதிக்கிறேன் இந்தி மொழியை அனைவரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இரு முன்னணி நடிகர்களுக்கு இடையேனயான வாக்குவதால ரசிகர்களிடையே பேசு  பொருளாகியுள்ளது.