வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (16:09 IST)

ஐபோன் 15 மாடல் அதிகம் ஹீட் ஆகிறதா? பயனர்கள் அதிர்ச்சி தகவல்

iPhone 15 series
சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் அறிமுகமான நிலையில் அந்த ஃபோனை ஏராளமானோர் விரும்பி வாங்கினர் என்பதும் இந்த மாடல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம்.
 
ஆனால் ஐபோன் 15 மாடல் வெளியாகி  ஒரு சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் திடீரென இந்த போன்கள் அதிகம் ஹீட் ஆவதாக பயனர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.  
 
ஆப்பிள் டெக்னிக்கல் குழுவும் இந்த சிக்கல் குறித்து பயனர்களுக்கு விளக்கம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
முந்தைய மாடல்களை விட இந்த மாடல் அதிகம் ஹீட் ஆகிறது என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிள் போன்கள் மொபைல் சந்தையில் மிகவும் நம்பகமான பிராண்டாகவும், அதேசமயத்தில் விலையுர்ந்ததாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran