1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 31 டிசம்பர் 2018 (13:49 IST)

பாக்கெட்டில் வைத்திருந்த ஆப்பிள் ஐபோன் வெடித்து விபத்து ...

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் நீண்டகாலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை  உபயோகப்படுத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு  அவர் வழக்கம் போல ஐபோனை தன் பாக்கெட்டில் வைத்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பாக்கெட்டில் இருந்த பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் திடீரென்று எரிந்து வெடித்ததாக அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
பாக்கெட்டில் எரிந்த தீயை தீ அணைப்பான் கொண்டு அணைத்ததாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட ஆப்பிள் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு வேறொரு புதிய போனை தருவதாக கூறியபோதும் உடன்படாத நபர், தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும்   இது சம்பந்தமாக அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாவும் செய்திகள் வெளியாகின்றன.