வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (08:19 IST)

அரியணை ஏறிய சார்லஸ்… மகன்கள் வில்லியம் & ஹாரிக்கு தந்தது என்ன??

மன்னர் சார்லஸ் மூத்த மகனுக்கு பட்டம் அளித்த நிலையில் இரண்டாவது மகனுக்கு அன்னை மட்டுமே கொடுத்தார்.


இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.

ராணி எலிசபத்தின் மறைவை தொடர்ந்து இவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அரியணை ஏறியுள்ளார். இந்நிலையில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி பட்டங்களை தனது மூத்த மகன் வில்லியம் மற்றும் மருமகள் கேட் வில்லியம் ஆகியோருக்கு வழங்கினார். இந்த பட்டங்களை முன்னதாக அவரும் அவரது மறைந்த மனைவி டயானாவும்  வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மகனுக்கு பட்டத்தை வழங்கிய நிலையில் இரண்டாவது மகன் ஹாரிக்கும் மருமகள் மேகனுக்கும் தனது அன்பை மட்டுமே வழங்கியுள்ளார். ஏனெனில் ஹாரி ராயல் அந்தஸ்த்தை மனைவிக்காக துரந்தவர். ஆம் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே 2020 ஆம் ஆண்டு திருமணமான இரண்டே ஆண்டுகளில் மேர்கனின் இனம் தொடர்பான சர்ச்சையின் காரணமாக ஒரு தங்கள் அரச பட்டங்களை விட்டுக் கொடுத்தனர். அவர்கள் அரச குடும்பத்தில் பணிபுரியும் உறுப்பினர்களாக குடும்பத்திற்குள் எப்போதும் திரும்ப மாட்டார்கள் என்று ஹாரி ராணி எலிசபத்திடம் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் மூன்றாம் சார்லஸ் மன்னன் தன் தாயையும் தன் மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்வதாக அவர் உறுதியளித்ததையும் நினைவு கூர்ந்தார். “என் அம்மா ஒரு உத்வேகம். இன்று நான் அவளது வாழ்நாள் சேவைக்கான வாக்குறுதியை புதுப்பிக்கிறேன்,” என்று லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து அவர் கூறினார்.