கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
கனடா பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுவது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில், கனடாவில் பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திர ஆர்யா என்பவர் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்த நிலையில், அங்கு தொழில் கூட்டமைப்பின் தலைவர் உள்பட சில பதவிகளில் அவர் இருந்துள்ளார்.
கனடா நாடாளுமன்ற கீழவையின் உறுப்பினராக 2015, 2019, 2021 ஆம் ஆண்டுகளில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட சந்திர ஆர்யா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை அடுத்து, அவர் பிரதமராக அதிக வாய்ப்பு இருப்பதாக கனடாவில் உள்ள அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva