1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (19:05 IST)

நிதியமைச்சர் பிடிஆர் தாக்கப்பட்ட வழக்கு: இரண்டு பெண்களுக்கு ஜாமின்

bail
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் காரில் செருப்பு எறிந்த விவகாரத்தில் மூன்று பெண்கள் கைதான நிலையில் அவர்களில் இரண்டு பெண்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் சிலர் திடீரென நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் காரை மறித்ததாகவும், அவர்களில் சிலர் கார் மீது செருப்பு வீசிய தாகவும் கூறப்பட்டது
 
இதனை அடுத்து வீடியோ ஆதாரங்களின்படி 3 பாஜகவை சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தனலட்சுமி மற்றும் தெய்வானை ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சரண்யா  என்பவரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.