சீனாவுடன் அமெரிக்கா போர் செய்யும்… முன்னாள் அதிபர் ட்ரம்ப் தடாலடி!
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தார்.
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த அவரின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதனால் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து இப்போது தங்கள் கட்சிக் கூட்டத்தில் பேசியுள்ள ட்ரம்ப் தேர்தல் ஊழலால் நான் தோல்வியடைந்து, இப்போது அமெரிக்கா பலவீனம் அடைந்து உள்ளது. இதனால் சீனா நம்மை மதிப்பதில்லை. சீனாவுடம் கண்டிப்பாக அமெரிக்கா போரில் ஈடுபடும் எனக் கூறியுள்ளார்.