சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் கைது
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகே மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞனை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணத்தை அடுத்த பெருமுச்சு கிராமத்தில் வசிப்பவர் முனிவேல் ஆவார். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அருகில் உள்ள பள்ளியில் படித்துவந்ஹ அவருக்கு அருகே வசித்து வந்த மோகன் ராஜ் எனபவர் வீடு புகுந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பயந்து போய் பெற்றோரிடம் இதுபற்றி கூறியிருக்கிறார். உடனே முனிவேல் அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் பாலைய கொடுத்த இளைஞன் மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டான்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.