முன்னணி நிறுவனத்தின் ஷூக்களில் மனித ரத்தம் கலந்துள்ளதா? அதிர்ச்சி தகவல்!
முன்னணி நிறுவனத்தின் ஷூக்களில் மனித ரத்தம் கலந்துள்ளதா?
அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்கும் ஷூக்களில் மனித ரத்தம் கலந்து உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் ஷூக்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று MSCHF நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் ஷூக்கள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஷூக்களில் ஒரு துளி மனித ரத்தம் கலந்து இருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது .
மேலும் அந்த ஷூக்களில் நைக் நிறுவனத்தின் லோகோ இருப்பதை பார்த்த பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் MSCHF ஷூ தயாரிப்பிற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி MSCHF நிறுவனம் மீது நைக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.