திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (14:48 IST)

அபாண்டமான பொய் கூறி வைரமுத்துவை பிளாக்மெயில் செய்த சின்மயி - உண்மையை உடைத்த ராதாரவி

அண்மையில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் கிளர்ச்சியை உண்டாக்கினார். இந்நிலையில் சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
 
சின்மயி 2 ஆண்டு சந்தா செலுத்தவில்லை என்று கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால் தான் வாழ்நாள் உறுப்பினருக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தியதாக சின்மயி தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து ராதாரவி பேட்டி ஒன்றில் கூறும்போது , 
 
சின்மயி வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து பிளாக் மெயில் செய்தார். ஆனால் அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதால் உடனே டப்பிங் சங்கத்தின் பக்கம் திரும்பிவிட்டார். சின்மயி முருகா என்றால் கூட மீ டூ தான் நினைவுக்கு வருகிறது. சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையர் வாசுகி அம்மாள். நீக்கிய பிறகு அவர் சங்கம் பற்றி பேசக் கூடாது. 
 
வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்தியதாக சின்மயி கூறுவது பொய். வைரமுத்து விஷயத்தில் அவர் கூறிய பாஸ்போர்ட் கதை போன்று தான் வங்கிக் கணக்கு கதையும். இது எல்லாமே பொய். அப்படியென்றால் வாழ்நாள் உறுப்பினர் அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். 
 
சின்மயி யார் மீது வேண்டுமானாலும் மீ டூ புகார் தெரிவிக்கட்டும். ஏன் அவர் பிறந்தபோதே மீ டூ நடந்தது என்று கூட சொல்லட்டும். அவர் யார், யாரின் பெயர்களை கூறி பணம் பெற நினைக்கிறாரோ அவர்களின் பெயரை சொல்லட்டும். அதற்கும் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியதற்கும் தொடர்பு இல்லை. 
 
மீடூ புகாரை சின்மயி உள்நோக்கத்துடன் தான் தெரிவித்து வருகிறார். தற்போது மீ டூவை ஆறப்போட்டுவிட்டு டப்பிங் சங்கம் பக்கம் வந்துள்ளார். என காட்டமாக  ராதாரவி தெரிவித்துள்ளார்.