1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (14:03 IST)

இப்படி ஆடை அணியலாமா? -ஐஸ்வர்யா ராய்க்கு வந்த சோதனை

ஆஸ்திரேலியாவில் தேசிய கொடியை ஏற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், தான் அணிந்திருந்த ஆடையால் தர்ம சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


 

 
கடந்த 15ம் தேதி இந்திய சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நகரில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றுமாறு நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


 

 
இதை ஏற்றுக்கொண்ட அவர் தனது குழந்தையுடன் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அப்போது அவர் லோ கட் நெக் வைத்த சுடிதார் போன்ற ஒரு ஆடையை அவர் அணிந்திருந்தார். அந்த ஆடை மிகவும் தளர்வாக இருந்ததால்,  புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் போதும், அங்கிருந்தவர்களுடன் உரையாடும் போதும், மேடையில் பேசும் போதும், கைகளை வைத்து மூடிய படியே அவர் பேசினார். அந்த ஆடை அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது நன்றாகவே தெரிந்தது.