வடகொரியாவிற்கு நெருக்கடி: ஒன்றிணைந்த மூன்று பெரிய நாடுகள்!!
உலக நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்குபெறும் பிராந்திய பாதுகாப்பு கூட்டம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் பாதுகாப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
கூட்டத்தின் முடிவில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
அதில், வடகொரியா கையாண்டு வரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் என வலியுருத்தினர்.
மேலும், அணு ஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது கூடுதல் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவும் ஐநா சபையில் நிறைவேற்றப்பட்ட தடைகளையும் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என முடிவுசெய்யப்பட்டுள்ளது.