எல்லோரையும் மிரட்டிய பிரட் லீ மிரண்டது யாரை பார்த்து தெரியுமா?


Abimukatheesh| Last Updated: திங்கள், 31 ஜூலை 2017 (12:03 IST)
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தனக்கு சவாலாக இருந்த பேட்ஸ்மேன் யார் என்பதை தெரிவித்துள்ளார்.

 

 
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ பந்தை எதிர்கொள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தினறிய காலம் உண்டு. இந்திய வீரர்களான சேவாக், சச்சின் ஆகிய இருவர் மட்டும்தான் அவரது பந்தை தும்சம் செய்தனர். 
 
தமிகழத்தில் நடைப்பெற்று வரும் டிஎன்பிஎல் டி20 தொடரின் இரண்டாவது சீசனுக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஹைடன் மற்றும் பிரட் லீ வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பிரட் லீ தனக்கு சவாலாக இருந்த பேட்ஸ்மேன் யார் என்பதை நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
சேவாக், கங்குலி, டிராவிட், தோனி போன்றவர்களுக்கு நான் பந்து வீசியுள்ளேன். அவர்களுடன் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரும் அதிர்ஷ்டம். ஆனால், எனக்கு மிகவும் சவாலாக இருந்தவர் சச்சின் மட்டும்தான். அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான காரியம் என்றார்.
 
சச்சின் உலக கிரிக்கெட் வீர்ரர்களில் சிறந்த வீரர். கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படும் சச்சின் அளவிற்கு அடுத்து யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் மற்ற வீரர்களை யாரும் இதுவரை ஒப்பிட்டதில்லை.


இதில் மேலும் படிக்கவும் :