1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2023 (22:30 IST)

ஜெர்மனியில் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம்...2,300 விமான சேவைகள் ரத்து...

german
ஜெர்மன் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலைய  ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மனி  நாட்டில் ஏஞ்சலா மார்க்கெல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பிராங்பர்ட், முனிச், ஹாம்பெர்க் உள்ளிட்ட 7 முக்கிய விமான நிலையங்களில்  பணிபுரிந்து வரும் விமான நிலைய  ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீதம் ஊழிய உயர்வு வழங்க வேண்டுமென கூறிவந்தனர்.

ஆனால்,இதற்கு  விமான  நிறுவனங்கள் செவிசாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊதிய உயர்வு கோரி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால், 7 விமான நிலையங்களில் சுமார் 3 லட்சம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தால் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.