திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (23:09 IST)

காதலருடன் சேர்ந்து தன்னை போன்ற உருவம் கொண்ட பெண்ணை கொன்ற இளம்பெண்

ஜெர்மனி நாட்டில் தன்னை போன்று உருவத்தில் உள்ள பெண்ணைத் தேடிச் சென்று கதிஜா என்ற பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் முனிச் என்ற பகுதியில் வசித்து வருபவர்  ஷராபன்.இவரது காதலவர் ஷேகீர். சில  நாட்களுக்கு முன்பு ஷராபன்  வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருந்தார்.

அப்போது, தன்னைப் போன்று உருவம் உள்ள அல்ஜீரியாவைச் சேர்ந்த கதீஜா(23) என்ற பெண்ணை சமூக வலைதளம் மூலம்  கண்டுபிடித்துள்ளார்.

அதன்பின்னர், இன்ஸ்டாகிராம் மூலம் அப்பெண்ணை தொடர்ந்து கொண்ட கதீஜா, ஆசைவார்த்தைகள் கூறி நேரில் வரவழைத்துள்ளார் ஷராபன்.

அந்த இடத்திற்கு வந்த கதீஜாவை ஷராபனு, அவரது காதலரும் சேர்ந்து காரில் கடத் தி உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி கொன்றனர்.

இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஷராபனும், அவரது காதலரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

பின்னர், போலீஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.