புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (10:04 IST)

இந்தியா தாக்குதலில் ஒருவர்கூட இறக்கவில்லை – பாகிஸ்தான் நக்கல் !

நேற்று அதிகாலை இந்திய விமானப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை எனப் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசீஃப் கஃபூர் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இந்திய ராணுவத்தினர் மீது ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத அமைப்புத் தாக்குதல் நடத்தியது. அதில் 45 சிஆர்பிஎஃப் வீரர்ர்க்ள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இந்திய சரியானப் பதிலடிக் கொடுக்க வேண்டும் நாடு முழுவதும் குரல்கள் எழுந்தன.

அதற்காக ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதையடுத்து யாரும் எதிர்பாராராத வகையில் இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. பாலகோட் எனும் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ அளவிலான குண்டுகளை மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் வீசியது. இந்தத் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரைக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தீவிரவாதிகளின் முகாம்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாகவும் இந்திய விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இது குறித்து பாகிஸ்தான் அரசு சார்பில் ‘ இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியது உண்மைதான். ஆனால் இந்தத் தாக்குதலில் ஒரே ஒருவர் கூற இறக்கவில்லை’ என பாகிஸ்தான் பாதுகாப்புப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசீஃப் கஃபூர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அளிக்கும் பதிலடி வித்தியாசமாக இருக்கும் என இந்தியாவிற்கு எச்சரிக்கைய்ம் அளித்துள்ளது.