ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (17:20 IST)

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: வட வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..!

South Korea - missiles
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியதை அடுத்து உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. 
 
அமெரிக்கா தென்கொரியா இடையே கடந்த 13 ஆம் தேதியில் இருந்து மிகப்பெரிய அளவில் கூட்டு இராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா தென்கொரியா, ராணுவ பயிற்சியை எச்சரிக்கும் வகையில் வடகொரியா அப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.. 
 
இந்த நிலையில் நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா சோதனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் வடகொரிய அரசு தனது அதிகார ஊர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா அதிபர் கிங் ஜாங் உன் தனது மகளுடன் நேரிலும் பார்வையிட்டுள்ளார். வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன
 
Edited by Mahendran