வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 ஜூன் 2024 (11:38 IST)

24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் கால் வைத்த ரஷ்ய அதிபர்! – உலக நாடுகள் கலக்கமடைவது ஏன்?

Kim Jong Un
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 24 ஆண்டுகள் கழித்து வடகொரியாவுக்கு பயணம் சென்றுள்ளது உலக நாடுகள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.



உலக நாடுகளின் கண்டனத்தையும் மீறி அணு ஏவுகணை சோதனை உள்ளிட்ட பல சோதனைகளை செய்து தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடாக வடகொரியா இருந்து வருகிறது. வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரியா அமெரிக்காவுடன் உறவுநிலையில் உள்ளதை கண்டிக்கும் விதமாக சமீபமாக குப்பை பலூன்களையும் தென்கொரியாவுக்குள் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் வடகொரியாவும், ரஷ்யாவும் தங்கள் உறவுநிலையில் வலுவாக உள்ளன. ரஷ்யா உக்ரைன் மீது போர்த் தொடர்ந்ததை உலக நாடுகள் பலவும் கண்டித்த சமயத்திலும் வடகொரியா, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி போருக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. தொடர்ந்து ரஷ்யா, வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ள போதிலும் அவர்கள் செயல்பாடுகள் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வடகொரியா சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அரசு முறை பயணம்தான் என சொல்லப்பட்டாலும் அவர்களுக்குள் என்னென்ன திட்டமிடல்கள் விவாதிக்கப்படும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

Edit by Prasanth.K