1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (20:49 IST)

ஆப்கான் அதிபர் நானே- அமருல்லா தகவல்

ஆப்கன் அதிபர் நாட்டை விட்டு ஓடிவிட்டதால், சட்டப்படி நானே அதிபர் என அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார்.
 
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.
 
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையைப் பிடித்த தலிபான்கள் அங்கு ஆட்டம் போட்டனர், அதேபோல் குழந்தைகளைபோல் சிறுவகை கார்களை போட்டு கையில் துப்பாக்கியுடன் வீடியோ வெளியிட்டு இன்று உலகையே அதிர வைத்தனர்.
 
ஏற்னவே சீனா, பாகிஸ்தான் நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தலிபான்களின் பழமைவாதம் பற்றிய பேச்சுகள் உலகம் முழுவதும் எதிரொளிக்கிறது.
 
இந்நிலையில்  அஷ்ராப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் ஓமன் நாட்டிற்குத் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியானது.
 
உலகமே ஆப்கானிஸ்தானை உற்றுநோக்கியுள்ள நிலையில், தற்போது அந்நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலே தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அதிபர் நாட்டை விட்டு ஓடிவிட்டதால், சட்டப்பூர்வமான  நானே அதிபர் என அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் வந்து பணி செய்யலாம் என தலிபான்கள் கூறியது குறிப்பிடத்தகக்து.