திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (14:54 IST)

மகனின் விந்தணுவை பாதுகாத்து குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகை..!

பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் இறந்த மகனின் விந்தணுவை சேகரித்து பாதுகாத்து அதன் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஸ்பெயின் நாட்டின் நடிகை அனா ஒப்ரெகன்  மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமான நிலையில் மகனின் விந்தணுவை இவர் சேகரித்து பாதுகாத்து வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் வாடகத்தாய் மூலம் மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்றெடுத்து அந்த குழந்தையை தத்தெடுத்துள்ளதாக தெரிகிறது.
 
இறந்து போன தனது மகனின் கடைசி ஆசையை நிறைவேற்றியதாகவும், மகனின் கடைசி ஆசையை எப்படி தன்னால் நிறைவேற்றாமல் இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். நடிகையின் இந்த செயலுக்கு ஸ்பெயின் நாட்டின் அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
மகனின் விந்தணு மூலம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று அந்த குழந்தையை நடிகையே வளர்ப்பது என்பது பெரும் விவாதத்தை எழுப்பி உள்ளது. வாடகை தாய் முறை ஸ்பெயின் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் நடிகையின் இந்த செயலுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva