வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 11 மே 2020 (22:28 IST)

இரண்டு கைகள் இல்லாமல் வேலை செய்யும் இளைஞர்.. வைரலாகும் வீடியோ

பொதுவாக ஒரு மனிதனுக்கு இரண்டு கைகள் தான் அவன் வேலை செய்வதற்கு இலகுவாக இருக்கும் ஆப்னால் அப்படி இரு கைகள் இல்லாமல் ஒரு இளைஞர் சர்வ சாதாரணமாக கால்களால் மண் அள்ளிப் போடும் வீடியோ  ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இளைஞர்கள்  வேலையில்லாமல் இருக்கும்போது, ஏன் வேலைக்கு போகவில்லை என்று கேட்டால் அந்த வேலை பிடிக்கபில்லை பிடித்த  வேலை கிடைக்கும் வரை வேறு வேலை பார்க்க  மாட்டேன் என்று சொல்பவர்களும் உள்ளனர். சிலர் முயற்சி செய்யாமலும் உள்ளனர்.

ஆனால், இரு கைகளும் இல்லாத ஒரு இளைஞர் தன் கால்களால் வெட்டியைக் கொண்டு மண் அள்ளிப் போடும் காட்சி அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.

இந்த தன்னம்பிக்கை மிக்க இளைஞருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.