வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 11 ஏப்ரல் 2020 (14:42 IST)

தலைகீழாக நின்று உடை மாற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் – வைரல் வீடியோ!

தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது ரகுல் ப்ரீத்தி சிங்  Handstand T-shirt Challenge என்ற வித்தியாசமான புது முயற்சி ஒன்றை செய்துள்ளார். அதவது " தினமும் ஒரே மாதிரி உடை அணிந்து சலித்துவிட்டது. எனவே உங்கள் எல்லோர்க்கும் இது ஒரு டாஸ்க் எனக்கூறி சுவற்றில் கால் வைத்து குனிந்துகொண்டு தலைகீழாக நின்று உடை அணிந்து கொள்கிறார். இந்த வீடியோ இன்ஸ்டாவில் வெளியிட உங்க பொழப்பு இப்படி நாறிப்போச்சே... என கூறி ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.