வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (22:59 IST)

பெண்ணின் இதயத்தை எடுத்து சமைத்துச் சாப்பிட்ட கொடூர நபர் கைது!

அமெரிக்க நாட்டில், சிறையிலிருந்து விடுதலையான ஒரு நபர் பெண்ணின் இருதயத்தை வெட்டியெடுத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது,. ஏற்கனவே அங்கு துப்பாக்கிக் கலாச்சாரமும் போதைப்பொருள்  பரவி வரும்  நிலையில், இதையொழிக்கும் வரையில் நேற்று ஒரு முக்கிய ஒப்பந்ததையில் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் (44). இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.

இந்த நிலையில், மூன்றாண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை பெற்ற அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான பின், சில நாட்கள் அமைதியாக இருந்த இவர் மீண்டும் ஒரு கொலைவழக்கில் கைதாகியுள்ளார்.

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண், ஆண்டிரியா பிளாங்கன்ஷிப் என்ற பெண்ணின் இதயத்தை வெட்டியெடுத்து, அதைத் தன் அத்தை வீட்டிற்கு கொண்டு சென்று, அவர்களுக்குச் சமைத்துக் கொடுத்து பரிமாறியுள்ளார்.

அதன்பின்னர், அத்தை, மாமா, அவர்களின் குழந்தையையும் கொன்ற ஆண்டர்சனை போலீஸார் கைது செய்துள்ளார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.