1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (07:53 IST)

அவதார் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைத்துள்ளதால் அடுத்தடுத்த பாகங்களின் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்தால்தான், அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆகும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார். அதையடுத்து எதிர்பார்த்த வசூல் கிடைத்துவிட்டதால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது அடுத்த மூன்று பாகங்களின் ரிலீஸ் தேதிகள் வெளியாகியுள்ளன. அவதார் மூன்றாம் பாகம் டிசம்பர் 19, 2025 அன்றும், அவதார் நான்காம் பாகம் டிசம்பர் 21, 2029 அன்றும், அவதார் 5 ஆம் பாகம் டிசம்பர் 19, 2031 அன்றும் வெளியாகும் எனவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.