செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (17:09 IST)

குழந்தையை வைத்து பளு தூக்கி விளையாட்டு! – வைரல் வீடியோவால் பெண்ணுக்கு சிறை!

அமெரிக்காவில் பிறந்த குழந்தையை பளு தூக்குவது போல் தூக்கி விளையாடி கொண்டே, அதன் முகத்தில் சிகரெட் புகையை ஊதிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள டெனஸி மாகாணத்தை சேர்ந்தவர் டைப்ரஷா செஸ்டோன். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

அந்த வீடியோவில் செஸ்டோன் புகைப்பிடித்து அதை குழந்தையின் முகத்தில் ஊதுகிறார். மேலும் அந்த குழந்தையை பளு தூக்குவது போல மேலும் கீழும் தூக்கி விளையாடுகிறார். இதை பார்த்த பலர் கமெண்டில் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சிலர் இந்த வீடியோவை போலீஸாருக்கு பகிர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள்.

அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். அதற்கு அவர் இந்த குழந்தையே எனக்கு வேண்டாம் என வெறுப்பாக பதிலளித்திருக்கிறார். இதனால் அந்த குழந்தைக்கு செஸ்டோனால் ஆபத்து வரலாம் என்பதால் போலீஸார் அந்த குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு செஸ்டோனை சிறையில் அடைத்துள்ளனர்.

அவரது சிறைவாசத்துக்கு காரணமான அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.