1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2019 (12:19 IST)

’48 ஆயிரம் பேருந்து ஊழியர்கள்’ டிஸ்மிஸ் : முதல்வர் அதிரடி உத்தரவு !

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் அரசு பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம், பேரை முதலவர் சந்திரசேகரராவ் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ள சம்பவம் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக உருவானது. அதற்கு முக்கிய காரணம் சந்திரசேகர ராவ். எனவே அம்மாநிலத்தில் முதல் முதல்வராக அவர் பதவியேற்று, தற்போது 2 வது முறையாக முதல்வராக தொடர்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநில அரசு பேருந்து ஊழியர்கள் , ’அரசு ஊழியகளுக்கு இணையான சம்பளம் வேண்டும், சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வந்தனர்.
 
அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை அன்று மாலை வரை போக்குவரத்து ஊழியர்களை பணிக்கு திரும்ப உத்தர இறுதி கெடு விதித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை விடவில்லை.
 
இதனையடுத்து முதல்வர் அம்மாநில உயரதிகாரிகளை ஆலோசித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 48 ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.