1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (16:52 IST)

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்...! பதறி ஓடிய பொதுமக்கள் !

earthquake
இந்தோனேசியாவில் சற்றுமுன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டு மக்கள் பதறி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த நிலையில் சற்றுமுன் இந்தோனேசியாவில் 6.4 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
 
இந்தோனேசியாவில் உள்ள மலுகு என்ற மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால் அந்த பகுதி மக்கள் பதறி ஓடியதாகவும் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்படவில்லை என்றும் இந்த நிலநடுக்கத்தினால் சேத விவரம் எதுவும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva