ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (20:56 IST)

உயிருக்கு பயந்து ரூ.160 கோடி மதிப்புள்ள வீட்டிலிருந்து வெளியேறிய பிரியங்கா சோப்ரா!

கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர், தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பின்னர், பாலிவுட் சினிமாவில் கிரிஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர்  நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ஹாலிவுட் மற்றும் வெப் சிரீஸ் தொடர்களில் நடித்து வருகிறர்.

இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ரூ.160 மதிப்புள்ள ஒரு சொகுசு பங்களா வாங்கினார். இங்கு, அவர்கள் தங்கள் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில் இங்கிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, ரூ.160 கோடி பணம் கொடுத்து அந்த பங்களாவை வாங்கிய நிலையில், அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதாகவும், நீர்க்கசிவால் வீட்டில் பூஞ்சை பாதிப்பு உள்ளதால் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதை  அறிந்து அவர்  தனது குடும்பத்தினருடன் அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் இந்த வீட்டை விற்ற கட்டுமான நிறுவனம் மீது பிரியங்கா சோப்ரா வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்குரிய இழப்பீட்டை அந்த நிறுவனம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.