திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (09:50 IST)

பர்சை திருடி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர்

பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர் ஒருவர் பர்ஸை திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நிய முதலீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் அதிகாரிகள் குவைத்திலிருந்து வந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
 
அப்போது குவைத் அதிகாரி ஒருவரின் பர்சை காணவில்லை என அவர் புகார் தெரிவித்தார்.
 
இதையடுத்து போலீஸார் அந்த அறையின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போது பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். ஏனென்றால் அவர்கள் நாட்டின் நிதித்துறை செயலாளர்  ஜரார் ஹைதர் கான் தான் இந்த பர்சை திருடியிருப்பது தெரியவந்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
 
இவர் பர்சை திருடிய காட்சி இணையத்தில் வெளியாகி பலரது கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளது.