1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜனவரி 2024 (08:35 IST)

நாசா கண்டுபிடித்த புதிய கிரகம்.. பூமியை விட இருமடங்கு.. தண்ணீர் வசதி: ஆச்சரிய தகவல்..!

Planets
நாசா கண்டுபிடித்த புதிய கிரகம்  பூமியை விட இருமடங்கு இருப்பதாகவும், அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் ஆச்சரியதகவல் வெளியாகியுள்ளது.
 
அமெரிக்காவின் நாசா  சூரிய மண்டலத்தில் உள்ள வேறு கிரகங்களில் தண்ணீர் உள்ளதா? காற்று இருக்கிறதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என ஆய்வு செய்து வரும் நிலையில்  பூமியை போல் ஒரு கிரகம் இருப்பதி கண்டுபிடித்துள்ளது.
 
பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதாக  கண்டறிந்துள்ளது. 
 
பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் இந்த கிரகத்தில்  நீர் முலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளதால் இங்கு மனிதர்கள் வாழ தகுதியானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தக் கிரகம் வெள்ளி கிரகத்தை போல 425 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருப்பதாகவும்,  வளிமண்டலம் நீராவியாக இருப்பதாகவும் நாசா  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva