வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (16:27 IST)

”நீருக்குள் மூழ்கிய ஒரு காதல் கதை”..நீருக்குள் காதலை சொன்ன காதலனுக்கு நேர்ந்த பரிதாபம்

நீருக்குள்ளே தன் காதலியிடம் காதலை சொன்ன காதலன் நீரோடு மூழ்கி இறந்துப்போன சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் வீபர் என்பவர் தனது காதலி கெனிஷா ஆண்டோனி உடன் டான்சானியாவின் பெம்பா தீவிற்கு சுற்றுலா வந்துள்ளார். இருவரும் அங்குள்ள கடலுக்கடியில் அமைந்திருக்கும் நீர் மூழ்கி விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது வித்தியாசமான முறையில் தனது காதலை வெளிபடுத்த முடிவு செய்துள்ளார்.

அதன் படி ஸ்டீவன் தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்தை நீருக்குள் மூழ்கி, வீட்டிற்குள் இருக்கும் தன் காதலி கண்ணாடியின் ஊடாக பார்க்கும்படியாக அந்த காதல் கடிதத்தையும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மோதிரத்தையும் காட்டினார். அந்த கடிதத்தில் ”உன் மேல் உள்ள காதலை சொல்லும் அளவுக்கு என்னால் முச்சை அடக்கிவைக்க முடியாது.

ஆனால் உன்னிடமுள்ள எல்லாவற்றையும் நான் விரும்புகிறேன். உன்னை அனுதினமும் நேசிக்கிறேன்’ என எழுதியிருந்தது. இதனை உள்ளிருந்து அந்த காதலி கண்ணீர் மல்க பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஸ்டீவன் தண்ணீரில் மூழ்கினார். விடுதி ஊழியர்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக உடனடியாக தண்ணீருக்குள் மூழ்கினர். ஆனால் அதற்குள் அவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை புகைப்படங்களுடன் கெனிஷா வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டதாக கண்ணீர் மல்க தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.