ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 4 நவம்பர் 2018 (10:34 IST)

போரின் சாட்சியாக திகழ்ந்த சிறுமி மரணம்...

ஏமனில் அதிபர் அப்த்ராபுய் மன்சூர் ஹதி அரசுக்கும்  ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி  கிளர்ச்சி படைகளுக்கும் இடையே கடந்த 2015 முதல் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள்  பட்டினியால் வாடுகின்றனர். தற்போது குழ்ந்தைகள்தான் அதிக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்ல் அமல் ஹூஷேன் என்ற சிறுமியின் புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல நாளிதழில் கடந்த  மாதம் வெளியாகி உலகெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த குழந்தையின் புகைப்படத்தில் ஐறுமி எலும்பும் தோலுமாக இருப்பது உலத்தின் கவனிப்பை ஏமன் பக்கம் திருப்பியது.
 
இந்த புகைப்படத்தை புலிட்சர் விருது பெற்ற பத்திரிக்கையாளர் டைலர் ஹிக்ஸ் எடுத்திருந்தார். மேற்சொன்னதுபோல அமல்  ஹூஷேன் பசியாலும் பட்டியாலும்  பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக இருந்த அவர் ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரின் சாட்சியாக இருந்தார். கடந்த 26 ஆம் (அக்டோபர்) தேதி உயிரிழந்தார்.
 
இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் 30 நாட்களில்  போரை நிறுத்த வேண்டுமெனெ வலியுறுத்திவருகின்றன.