தைலமரக்காட்டில் உல்லாசம்: உடலுறவின் உச்சத்தில் உயிரை விட்ட கஸ்தூரி!

Last Updated: வெள்ளி, 2 நவம்பர் 2018 (15:06 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 வயதான் இலம்பெண் ஒருவர் தனது காதலனுடன் உடலுறவில் ஈடுப்பட்ட போது மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் பகுதியை சேர்ந்த 19 வயதான கஸ்தூரி என்பவர் மடுந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த வாரம் காணமல் போனதாக இவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். 
 
இதனால், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கடைசியாக அவர் மருந்தகத்தில் இருந்து ஒரு ஆணுடன் சென்றதாக கூறப்பட்டுள்ளது. பின்னர், அவரது உடலை அழுகிய நிலையில்  புதுக்கோட்டையில் உள்ள மல்லிப்பட்டினம் ஆற்றில் இருந்து கண்டு பிடித்தனர். 
 
இதன் பின்னர் அந்த ஆண் யார் என போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது, நாகராஜன் என்ற நபரை போலீஸார் கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையின் போது நானும் கஸ்தூரியும் இரண்டு ஆண்டுகளாக காதலிக்கிறோம். இருவரும் அடிக்கடி வெளியே செல்வோம். அப்படி செல்லும் போது உடலுறவிலும் ஈடுபடுவோம். 
 
அது போன்ற அன்று வெளியே சென்ற போது தைலமரக்காட்டில் உடலுறவில் ஈடுபட்டோம். ஆனால், எதிர்பாராத் விதமாக கஸ்தூரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் நான் என்ன செய்வதென்று தெரியாமல் கஸ்தூரியின் உடலை மூட்டை கட்டி ஆற்றில் வீசிவிட்டேன் என தெரிவித்துள்ளார். 
 
ஆனால், கஸ்தூரியின் உறவினர்கள் கஸ்தூரி கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து சரிவர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :