செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (09:38 IST)

கடுப்பான கசாப் கடைக்காரர்: பெற்ற மகளை துண்டுதுண்டாக வெட்டிய அவலம்!!!

மகளுடன் ஏற்பட்ட சண்டையில் கசாப் கடைகாரர் அவரது மகளை துண்டுதுண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியை சேர்ந்த ஹசன் என்பவர் தனது மகள் திமென்னுடன் வசித்து வந்தார். ஹசன் கறிக்கடை நடத்தி வருகிறார், திமென் நடனக்கலைஞராக உள்ளார்.
 
இந்நிலையில் தந்தை மகளுக்கிடையே சமீபத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் உச்சகட்ட கோபத்திற்கு சென்ற ஹசன் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்து உடல்பாகங்களை காட்டுப்பகுதியில் வீசினார்.
 
நீண்ட நாட்கள் கழித்து இந்த விஷயம் வெளியே கசியவே, போலீஸார் கொலையாளியை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். கடைசியாக ஹசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.