வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (17:48 IST)

1200 ஊழியர்களை குடும்பத்துடன் சுற்றுலா அழைத்துச் சென்ற பிரபல தொழிலதிபர்

tokyo disneyland
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல சிட்டாடல் என்ற நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களை டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கென்னத் சி.கிரிபின் . இவரது நிறுவனம் சிட்டாடெல். இந்த நிறுவனத்துடன் மேலும் பல தொழில்களையும் அவர் செய்து வருகிறார்.

இந்த நிலையில், தன்  நிறுவனத்தின் 30 வது ஆண்டு விழாவையொட்டி, தன் நிறுவன ஊழியர்களை மகிழ்விக்க எண்ணி, தன் நிறுவனத்தில் உள்ள 1200 ஊழியர்களை அவர்களின் குடும்பத்தினருன் 3 நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தார்.

அதன்படி, டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அழைத்துச் செல்வது, சாப்பாடு, தங்குமிடம் ஆகிய அனைத்துச் செலவையும் அவரே ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகிறது.

 இதற்காக மொத்தம் ரூ. 72 லட்சம் செலவானதாக கூறப்படுகிறது.