வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (21:00 IST)

வீட்டில் பயங்கர வெடிவிபத்து...10 வீடுகளை தாண்டி உடைந்த கண்ணாடி... 5 பேர் உயிரிழப்பு

blast
அமெரிக்க நாட்டின் பெல்சில்வேனியாவில் ஒரு வீட்டில் வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா என்ற பகுதியில்  குடியிருப்புகள் இருக்கும் நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், 2 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், இந்த வீடுகளிலிருந்த  5 பேர் உடல் கருகி பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும், இவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த விபத்து பற்றி அறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரு வீட்டில் வெடிவிபத்து நிகழ்ந்த நிலையில், சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள் அதிர்ந்ததாகவும், அவர்களின் வீடுகளில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.