வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (10:38 IST)

ஒரு ட்ரெஸ் 15 ரூவா.. ஷாப்பிங் மாலை கொள்ளையடித்து சென்ற மக்கள்!

Pakistan

பாகிஸ்தானில் புதிதாக திறக்கப்பட்ட மாலில் மலிவு விலையில் பொருட்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பாகிஸ்தானில் 2021 வெள்ளத்திற்கு பிறகு அசாதாரணமான பொருளாதர மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே தவிக்கும் நிலை உண்டாகியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கராச்சியில் புதிய ஷாப்பிங் மால் ஒன்றை திறந்துள்ளார்.

 

தொடக்க விழா சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15க்கு துணிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், காலை முதலே மக்கள் கூட்டம் ஷாப்பிங் மால் வாசலில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். மால் திறக்கப்பட்டதும் முண்டியடித்துக் கொண்டு மக்கள் உள்ளே நுழைந்ததால் கண்ணாடி கதவுகள் உடைந்தன.
 

 

அதைப்பற்றி கவலைப்படாத மக்கள் உள்ளே புகுந்து கிடைத்த பொருட்கள், துணிகளை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த நெரிசலில் பலரும் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மக்களை மாலை விட்டு வெளியேற்ற அதன் பாதுகாவலர்கள் பெரிய தடிகளை எடுத்து அடித்து அவர்களை விரட்டும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K