1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (08:24 IST)

இறந்த தந்தையுடன் செல்பி எடுத்த மாடல் அழகி

மாடல் அழகி ஒருவர் அவரது தந்தை இறந்ததை செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செர்பியாவை சேர்ந்த ஜெலிகா லூபியிக் என்ற இளம்பெண் மாடல் அழகியாக உள்ளார். ஜெலிகாவின் தந்தை வயது முதிர்ச்சியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விளம்பர பைத்தியமான ஜெலிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறந்து கிடந்த தனது தந்தையின் உடல் முன்பு செல்பி எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது எங்களது ஆசை, ஆனால் அது நமது கையில் இல்லை. ஒரு நல்ல மகளாக என்னை வளர்த்ததற்கு எனது தந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டிருந்துள்ளார். 
 
இதனைப் பார்த்த பலர் ஆத்திரமடைந்து, மனநோயாளிகள் மட்டுமே இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவார் என மெசேஜ் அனுப்பினர். கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, ஜெலிக்கா அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.